மார்பகங்களின் பால்சுரப்பிகள் கொழுப்பால் சூழப்பட்டவை. மரவேர்களைப்
போல முலைக் காம்பின் பின்புறம் பால்ச்சுரப்பிகள் உள்ளன. சிறியவை சிறியவைகளாக அமைந்துள்ளன. உண்மையில் மார்பகங்களை சூழ்ந்துள்ள கொழுப்பே அவற்றின் அமைப்பை நிர்ணயிக்கின்றது. பெரியதோ சிறியதோ என்று தீர்மானிக்கப்படுகிறது. பாலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரியதோ சிறியதோ எல்லாமே சிறந்தவைதாம்.
ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா?
ஆம். கைகளோ அல்லது கால்களோ அல்லது புருவங்களோ ஒரே மாதிரி இருப்பதில்லையே. பருவம் அடையும் போது மார்பகங்களின் அளவில் பெரிய வித்தியாசம் காணப்படும். இரண்டுமே வளர்கின்ற போதிலும் ஒரே அளவில் வளர்ச்சியுறுவதில்லை. சில வேளைகளில் ஒன்று முற்றாக வளர்ந்தபிறகே மற்றது வளரத் தொடங்குகிறது. பெரிதானது பெரிதாகவே இருக்க மற்றது அதனை நெருக்கிக் கொண்டபடி இருக்கும். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.
மார்பகங்கள் உருக்குலைந்து காணப்பட்டால் என்ன?
வளர்ந்து வரும் போது மார்பகங்கள் உருக்குலைந்து தான் காண்ப்படும். அதனால் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தேவையில்லை. மார்புப் புற்றுநோய் பருவம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகே வருகிறது.
இரு மார்பகங்களும் பாரதூரமாக வித்தியாசப்பட்டுக் காணப்பட்டால் ஒரு குழந்தை வைத்தியரையோ பிள்ளைப்பேற்று நிபுணரையோ அணுக வேண்டும்.
மார்பகங்கள் வந்தவுடன் மார்புக்கச்சை தேவை தானா?
எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் தேவையில்லை. மிகவும் சிறியவையாக இருக்கும்போது தொங்கிப் போய்விடுமோ என்ற பயத்திற்கே இடமில்லை.
மார்பகங்கள் மிகவும் பெரியவையாக உள்ளபோது மட்டுமே தொங்கிவிடுமாதலால் மார்புக் கச்சு தேவை. வேகமாக நடக்கும் போதும் ஓடும் போதும் மார்புக் கச்சை அணிந்திருப்பது வசதியாய் இருக்கும்.
முலைக்காம்புகள் கவிழ்ந்து இருப்பதனாலென்ன?
கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளுக்குக் காரணம் முலைக்காம்புகளை உள்ளுக்குள் இழுத்து வைக்கும் திசுக்களே ஆகும். கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளால் உள்ள பிரச்சினை குழந்தைக்குப் பால் ஊட்டும் போது சிரமம் தரும். கர்ப்பம் தரிக்கும் போதும் முலைக்காம்புகள் தாமாகவே திரும்பிவிடும். சிலவேளைகளில் முலைக்காம்புகளை நடுப்புறம் நோக்கி விரல்களால் இழுத்துவிட உதவும். இது இறுக்கமான திசுவை இளக்கி முலைக்காம்புகளை திருப்பி விடுகிறது.
கட்டாயகமாக பால் ஊட்ட தேவைப்படாவிட்டால் கவிழ்ந்துள்ள முலைக்காம்புகள் சாதாரணமானவையே. ஒருவித பிரச்சினையும் இல்லை.
பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் எப்படி மார்பகங்களைப் பெரியனவாகச் செய்கின்றனர்?
இந்தச் சத்திர சிகிச்சையானது பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆகும்.
முதலில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகின்றனர். (வெட்டிய அடையாளம் தெரியாமலிருக்க) அதன் பின் ஒவ்வொரு மார்பகத்திலும் பைநிறைய சிலிகோனை நிரப்பி இந்தப் பைகள் விலாவுடன் தைக்கப்படுகின்றன. இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போய்விடும். இந்தச் சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்துவதாகவும் முலைக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை என்றும் குறைப்படுகின்றனர். இந்த சத்திர சிகிச்சை செய்து கொள்வது பாலியல் hPதியில் கூடிய கவர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. ஆதலால் இது பெரிதும் வெட்கப்படக் கூடியதாகவுள்ளது.
மற்றொரு பிரச்சினை யாதெனில் பெருப்பிக்கப்பட்ட மார்பகம் என மற்றையோரால் கண்டு அறியக் கூடியதாகவுள்ளது. மார்பகக் கவர்ச்சியாகக் கொள்ளும் துள்ளும் தன்மையை அவை இழந்து விடுகின்றன. நீங்கள் முதுகுபடப் படுத்திருக்கும் போது சற்று ஒரு புறமாகச் சரிவதில்லை. பீரங்கிகளைப் போல குத்தென நிற்கும். சிலவருஷங்களுக்குப் பிறகு மார்பகங்கள் உருக்குலைந்து கோலம் கெட்டுவிடும். திசுக்களில் வடுக்கள் தோன்றுவதால் இது ஏற்படுகிறது. அநேக பெண்கள் தமது சிலின்கோ பைகளை அகற்றுகின்றனர். அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் பெரும் தொகையான பணத்தை நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியுள்ளன.
சிலிக்கோன்பைகளை உள்ளே வைத்துக்கொண்டவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வர ஏதுவாகும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மார்பகங்களை பெரிதாக்க ஏதாவது எளிய முறை உண்டா?
இதற்கான உடற்பயிற்சி ஒன்றும் இல்லை. ஏனெனில் மார்பகத்தில் தசையொன்றுமில்லை. விலாவின் பின் புறத்தில்தான் தசை உள்ளது.
மார்பகங்கள் கொழுப்பாலானவையாதலால் உடல் கொழுத்து நிறைகூடினால் மார்பகங்கள் பெருக்க இடமுண்டு.
மார்பகங்களை ஊதவைக்கும் ஒரே மருந்து எஸ்ரேஜன் என்கின்ற பெண்ணுக்குரிய ஓமோன் ஆகும். இது கருத்தடை மாத்திரையிலுள்ளது. உங்களுடைய புதிய மார்பகங்கள் சிறிது நோவுடையதாயிருக்கும். (வீங்கியும் மிருதுவாகவும் இருப்பதனால்) முழுமையான நிறை 5 கிலோகிராமுக்குக் கூடுதலாக இருக்கும். உங்களுக்கு ஏன் பெரிய மார்பகங்கள் வேண்டும். பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் மெலிந்த சிறிய மார்பகங்களை உடைய பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது தெரியுமா? ஏனெனில் மெலிவானவர் நாகரிக உடையில் அழகாகத் தோற்றம் அளிக்கிறார்;. அதோடு
மெலிந்து சிறிய மார்பகங்களை உடையவர்கள் மார்புக்கச்சை அணியாமல் உல்லாசமாகத் திரியலாம்.
முலைக்காம்புகள் பெரிதாகவிருந்தால் என்ன?
எத்தனையோ பெண்கள் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள் என்பதை அறிய ஆச்சரியப்படுவீர்கள். தமது முலைக்காம்புகள் மிகவும் பெரியவையாகவுள்ளன என்று ஏன் நினைக்கிறார்கள்? ஏனெனில் நிர்வாணப் பெண்களின் படங்களில் சிறிய நிமிர்ந்த முலைக்காம்புகள் உடையவர்களாகத் தோற்றுவர். எல்லோருக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளபோது அப்படித்தான் இருக்கும்.
முலைக்காம்புகளுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் வளர்ச்சியுறுவதில்லை. முலைக் காம்புகளும் கூட முதலில் வளர்ச்சியுறுகின்றன. அவை பெருத்து கருமைநிறம் அடைகின்றன. அவை தீண்டப்படும் போது எழுச்சி பெறுகின்றன. சிறிய அளவினதாகி கூர்மையாகத் தோன்றும். இப்புகைப்படங்களில் மட்டுமே குத்தாகவுள்ளன. மற்றெல்லா நேரங்களிலும் அல்ல.
அநேக படப்பிடிப்பாளர்கள் கையில் பனிக்கட்டியை வைத்திருந்து முலைக்காம்புகளைச் சுருங்கச் செய்து நிமிர்ந்து இருக்க வைத்துப் படம் பிடிக்கின்றனர். பனிக்கட்டி இல்லாதபோது அவர்களும் மற்றவர்கள் போலவே தோற்றமளிப்பர்.
மார்பகங்கள் மிகப் பெரியதாக இருந்தால்...
பெரிய மார்பகங்களை உடைய சில பெண்கள் பிரகாசிப்பதற்கும் வேறுசிலர் அலங்கோலமாகவும் தோற்றமளிப்பதும் ஆச்சரியம் ஊட்டவில்லையா? இரண்டாம் வகைக்குக் காரணம் சோகமே.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவது சில மார்புக் கச்சைகளை வைத்து சாய்ந்துவிடாது பாருங்கள். புவி ஈர்ப்பு எமக்கு அறிவுறுத்துவது இதுதான். பாரமான மார்பகங்கள் மார்புக் கச்சை இல்லாவிட்டால் சாய்ந்து தொங்கும். சிறிய அளவினதே விரும்பப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யலாகாது. ஏனெனில் அது உருவத்தைச் சிதைத்து அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது . சரியான அளவானதைப் பயன்படுத்தும் போது எவ்வளவு அழகாகத் தோற்றமளித்தீர்கள் என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
பெரிய மார்பகங்களைச் சிறியவை ஆக்க சத்திரசிகிச்சை உண்டு. இது அநேக வடுக்களை ஏற்படுத்திவிடும். பாரம் அதிகமாகி முதுகுவலி ஏற்படுமாயின் இதனைச் செய்ய யோசிக்கலாம்.
சாய்ந்து தொங்கிப் போவதைப் பற்றிய பேச்சு
அநேகமாக எல்லா மார்பகங்களும் ஒரளவு சாய்ந்து தொங்கிப் போகும். நிமிர்ந்து மேல் நோக்கி உள்ளவை கூட ஆராய்ந்து பார்த்தால் கொழுப்பெல்லாம் கீழ்முகமாகவும் முலைக்காம்பு வளைவின் மேற்பகுதியில் இருப்பதையும் காணலாம்.
அநேக நிர்வாணப் புகைப்படங்களில் கைகளை மேலே உயர்த்தி தோள்களைப் பின்னுக்குத் தள்ளியும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையா? ஏனெனில் இது மார்பகங்களை உயர்த்துகிறது. இதனால் தொங்குவது குறைவாகத் தென்படுகிறது. அதனால் நிர்வாணக் காட்சிப்பொருள்கள் கூட தங்கள் மார்பகங்களைப் பற்றி திருப்தியற்றுத் தென்படுகிறது. ஒருபோதும் தொங்காத மார்பகங்கள் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவையே. நாம் புகைப்படங்களில் காணும் அழகிகள் அனைவரும் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களே. அப்படிப்பட்ட பெண்களின் தோற்றங்கள் வெறும் போலித் தோற்றங்களே.
இது எல்லாம் சாதாரணமே. பறவைகள் கூட தமது கூட்டில் வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண பிளாஸ்ரிக்குகளின் மீது தமது சொந்த முட்டைகளைக் காட்டிலும் கூடிய கவர்ச்சி கொள்ளுவதைக் காணலாம்.
No comments:
Post a Comment