புதுமையான அனுபவம்!
தாம்பத்ய உறவின் முதல் 'அப்ரோச்' என்பது முதல் அத்தியாயத்தின் முகவுரை. அது எது? முதல் சந்திப்பு அரங்கேறும் முதல் இரவு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுவே காதல் தம்பதிகளாக இருந்தால், தாம்பத்ய உறவுக்கு முதல் கட்டம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், காதலர்கள் அதுவரை பொறுத்துக் கொள்வார்களா? . உடல் சங்கமத்தின் முதல்படியில் ஏறும் போதே சறுக்கல் எதுவும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிககவனம் தேவை. மனத்தடுமாற்றம், ஏமாற்றம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை சுமந்து கொண்டு முதல் இரவு அறைக்குள் நுழைந்தால் வேதனை தான் மிஞ்சும். எத்தனையோ பேர் வாழ்க்கையில் விதி விளையாடி பலரை வேதனைத் தீயில் தள்ளியுள்ளது. எனக்கு அழகான மனைவி கிடைக்கவில்லை.
மனைவியுடைய அணுகுமுறையே சரியில்லை. செக்ஸ் விஷயத்தில் ஒண்ணுமே தெரியவில்லை என்ற ஆதங்கமான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் சுமத்துவதுண்டு. தங்களது மனதில் எழுந்த ஆசைகளை மாயக்கண்ணாடியில் தெரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பது ஆண், பெண் இருபாலரின் ஒருமித்தமான கருத்து. ஆனால், சில ஆசைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதை விட செயலில் காட்ட முனைவது மனித இயல்பு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமா? என்றால், இல்லை. இதையெல்லாம் சொல்லி கொடுக்கனுமா? அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளட்டும் என்று முந்தைய கால பெரிசுகள் சொல்வதுண்டு. உடல் உணர்ச்சிகளை பண்பாட்டுக்கு உட்பட்டு பகிர்ந்து கொள்வதில் சில நெறிமுறைகளை, அனுபவம் முலம் தெரிந்து கொண்டவற்றை அவர்கள் தங்களது சந்ததியினருக்கு சொல்லி கொடுத்தால்தான் பல பிரச்னைகள் எழாது. பெரியவர்கள் அனுபவ பாடத்தை சொல்லாமல் விட்டுவிட்டால், நண்பர்களின் தவறான ஆலோசனையை கேட்டுவிட்டு செயலில் இறங்கி தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.பொதுவாக திருமண நாளில் அதிகாலையில் இருந்தே மணமக்களை ரெஸ்ட்டே இல்லாமல் பாடாய் படுத்தியிருப்பார்கள். ஒரே நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து மழையில் நனைந்து ஒருவித டென்ஷனோடு இருப்பார்கள். அன்றயதினத்தில் இருவருக்குமே ஒய்வு தேவை. மன ஒற்றுமைக்காக சில விஷயங்களைப் பேசிக் விட்டு புதுமாப்பிள்ளை, பெண்ணும் உடலுக்கு ஒய்வு கொடுப்பது மிகவும் நல்லது. மனைவிக்கு ஆசைகள் அதிகமாக இருந்துவிட்டு, கணவன் ஒதுங்கிக் கொண்டாலோ, கணவன் அவசரப்பட்டு, மனைவி ஒதுங்கினாலோ ஒருவித வேதனை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும். அதாவது எதிர்பார்ப்பு ஏற்பட்டவருக்கு ஏமாற்றம். அதனால் தப்பு இல்லை. பரீட்சை எழுதும் முன்பு எப்படி பாடங்களை படித்துக் கொண்டு தயாராகிறோமா? அப்படிதான் முதலிரவு அறைக்குள் நுழையும் போது மனத்தெளிவு, ஒரு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். செக்ஸ் தானே என்று அலட்சியமாக இருந்துவிட்டு உங்களது ஆசைகளை நிறைவேற்ற முனைந்தால் உங்களது எதிர்பார்ப்புகள் தோற்றுப் போகும். இது எத்தனையோ தம்பதிகள் வாழ்க்கையில் நடந்துள்ளது. முதலிரவு சம்பவங்களை பலர் தங்களது வாழ்க்கையில் நினைத்து பார்ப்பதுண்டு. பலருக்கு இனிமையான நினைவுகளாக இருக்கும். பலருக்கு வேதனையாக இருக்கும். அன்றயதினம் மனதில் ஏற்பட்ட காயம் ஆறாமல் உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ உண்மையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் கணவனும் மனைவியும் ஒருவரி ஒருவர் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment